Sunday 21 October 2012

தமிழ்ச் சாதிகளின் வரலாறு

     
                                       தமிழர் வேந்தன் - தொல்காப்பியம் போற்றும் இந்திரன்  
              

               மனிதனின் தோற்றம் பற்றிய சர்ச்சைகளை விடுத்து மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி, அறிவியல் ரீதியாக இயங்கியல் தத்துவத்தின்படி பகுத்தறியும்போது மட்டுமே சாதி பற்றிய இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.இயங்கியல் தத்துவத்தின்படி, ஆதியில்  மனிதன் மழை ,வெள்ளம் போன்றவைகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் 
கொள்ள மலைகளிலேயே வாழ்ந்தான். மலைகளில் காட்டுவாசியாக இருந்த மனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டு வந்தான். 
கூட்டம் கூட்டமாக வாழ்ந்த அம்மக்கள்  குறிஞ்சி நில குறவன்-குறத்தி ( இன்றைய குறவன்-குறத்தியோடு மட்டும் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. பல பழங்குடிகளும் குறவன் குறத்திகளே.) என அழைக்கப்ட்டனர். குகைகளில் வைத்து உண்ணப்படும் பொருட்கள் ( இறைச்சி, பழங்கள் ) நீண்ட நாள் மழை மற்றும் இயற்கை  சீற்றத்தின் போது கெட்டுப் போய் அவர்களை பலநாள் பசியில் ஆழ்த்தியது.நீண்ட நாள் மழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அவன் குகையை விட்டு 
வெளியல் வந்து வேட்டையிட முடியாமல் போனது.

                  இவ்வுணவுப் பிரச்சனைகளுக்குத் தீர்வாய்  ஒரு பெரும் கூட்டம் குறிஞ்சி நில  குறவன்-குறத்தியிலிருந்து பிரிந்து நிரந்தர உணவுத் தேவைக்காய் மலையை விட்டு கீழிறங்கி காடுகளில் இருப்பிடங்களை அமைக்கத் தொடங்கியது. அவன் உணவுக்காக விலங்குகளைப் பழக்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். அங்கு இயற்கையாய் விளைந்த தானியங்களையும் சேகரித்து உணவுத்தேவையைப் ஓரளவு பூர்த்தி செய்து கொண்டான். அம்மக்களே இடையர்/ஆயர் (கோனார்) என்றும் அந்நிலப் பகுதியே முல்லை எனவும் அழைக்கப்பட்டது.எனினும் பெரும் வெள்ளம், காட்டுத்தீ மற்றும் ஆண்டு முழுவதுக்குமான உணவுத்தேவை போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் அவனை மீண்டும் ஆற்றங்கரை ஒட்டிய சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது.

                      
             மனிதன் ஆற்றங்கரைச் சமவெளிகளுக்கு இடம்பெயர்ந்த நிகழ்வுதான் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சின் அடுத்த கட்டமாகிப் போனது. பள்ளமான ஆற்றங்கரைச் சமவெளிப் பகுதியில் முதன் முதலில் உணவுத் தானியங்களை பயிரிடும் வேளாண்மையை முல்லை நிலத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒரு கூட்டம் கண்டுபிடித்தது. அம்மக்களே பள்ளர்/மள்ளர் என அழைக்கப்பட்டனர். இந்நிலப்பரப்பே மருதம் என அழைக்கப்பட்டது.  மற்ற நிலப் பகுதிகளை ஒப்பிடும்போது மனிதனின் முக்கிய வாழ்வாதாரமான உணவும், நீரும், இருப்பிடமும் மருத நிலத்திலேயே பெருமளவில் இருந்தன. ஒப்பில்ல உணவு உற்பத்தியின் உச்சமாக நெல் வேளாண்மை மருதநிலப்   பள்ளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி அதிக அளவில் மருதநிலத்தில் வேளாண்மை செய்யப்பட்டதால் பிற நிலத்து மக்களும் மருதநிலத்தைச் சார்ந்தே வாழும் நிலை ஏற்ப்பட்டது.

        மருதநிலத்தின் பெரும் உணவு உற்பத்தியின் விளைவால் அதற்கான தொழிலாளர்களின் தேவையும் அதிகரித்தது. உழவுக்குத் தேவையான கலப்பைகளையும், போர்க்கருவிகளையும் வேறுசில இரும்பு மற்றும் மரப் பொருட்களையும் செய்யும் தொழிலை அம்மருத நில மக்களில் ஒரு பகுதியினர் மேற்கொண்டனர். அம்மக்களே கொல்லர், தச்சர் என அழைக்கப்பட்டனர்.

            மக்களின் பழக்கத்திற்குப் பயன்பட்ட மண்பாண்டங்களை மருத நில மக்களில் ஒரு கூட்டம் செய்யத்துவங்கியது. அம்மக்கள் குயவர் எனப்பட்டனர். மருதநிலத்தில் பனையைப் பயிர் செய்த ஒரு பகுதி மக்களே சானார்(நாடார்) எனப்பட்டனர். இதையே கரிவலம்வந்தநல்லூர் கல்வெட்டு தேவேந்திரன் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பனை போன்ற வித்துகளைக் கொண்டு வந்து பயிர் செய்ததாகக் கூறுகிறது.

          முதன் முதலில் மனிதன் மீன் பிடிக்க கற்றுக்கொண்டதே ஆறு மற்றும் குளங்களில்தான். அதன்பின் மனிதன் கடலில் மீன்பிடிக்கவும் கற்றுக்கொண்டான். அவ்வாறு மருதநில ஆறுகளில் மீன்பிடித்த மக்களே கரையாளர் என அழைக்கப்பட்டனர். அவர்களே நூறு ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கரையாளப் பள்ளர் எனவும் அழைக்கப்பட்டனர். கடலில் மீன்பிடிக்கக் கற்றுக்கொண்ட மருதநில மக்களே நெய்தல்நில மக்களாகவும் மீனவர், பரதவர், முக்குவர் எனவும் அழைக்கப்பட்டனர்.
           
             இம்மருதநில மக்களோடு "மருதநில தொழிற்மக்கள்" பதினெட்டு வகையினரும் இருந்ததாக இலக்கியச் சான்றுகள் உண்டு. அவர்கள் :
  1. செம்மான்(தோல் தொழிலாளி)
  2. குயவன்(மண்பாண்டம் செய்வோர்)
  3. கொத்தன்(வீடு கட்டுவோர்)
  4. கொல்லன்(இரும்பு வேலை செய்வோர்)
  5. கன்னான்(செம்பு வேலை செய்வோர்)
  6. தட்டான்(பொன் வேலை செய்வோர்)
  7. தச்சன்(மரவேலை செய்வோர்)
  8. கற்றச்சான்(கல் வேலை செய்வோர்)
  9. செக்கன்(எண்ணெய் ஆட்டுவோர்)
  10. கைக்கோளன்(நெசவுத் தொழிலாளி)
  11. பூக்காரன்(பூ வேலை செய்வோர்)
  12. கிணையன்(கிணைப் பறையன்)
  13. பாணன்(பாடுநர்)
  14. கூத்தன்(ஆடுநர்)
  15. வள்ளுவன்(அறிவர்)
  16. மருத்துவன்(நோய் குணப்படுத்துவோர் )
  17. வண்ணான்(சலவைத் தொழிலாளி)
  18. மஞ்சிகன்(சவரத் தொழிலாளி)
          இவர்களைத்  தவிர  பிள்ளை, முதலி போன்ற பட்டங்களைக் கொண்டும் பல சிறு சிறு சாதிகளும் உள்ளன. அவையாவும் இடைக்காலத்தில் உருவான சாதிகள் ஆகும். இன்றைய  சாதி என்பது தமிழர்களின் தொழில் அடிப்படையில் இருந்த அடையாளம் ஆகும். அவ்வடையாளத்தை எவ்வித சிக்கலும் இல்லாமல்தான் தமிழர்கள் வைத்திருந்தனர். 
வந்தேறி தெலுங்கு வடுகர்களால்(நாய்க்கர் ) நிகழ்த்தப்பட்ட வேந்தர்களின் வீழ்ச்சி  தமிழரின் வாழ்வியல் அமைப்பையே தலைகீழாய்ப்  புரட்டிப்போட்டது. தொழிற்பிரிவுகள் சாதிகளாக இருக்கப்பட்டன.   

                  மார்க்சிய தத்துவத்தின்படி சொல்லப்படும் குடும்பம்-சொத்து- அரசு என்ற நிறுவனங்கள் முதன் முதலில் மருதநிலத்திலேயே நிறுவப்பட்டன. நாகரீக வாழ்வின் பரிணாம வளர்ச்சியின் முதற்க்கட்டமாக   உறவுமுறையற்ற காட்டுமிராண்டி வாழ்வு சீரமைக்கப்பட்டு "குடும்பம்" என்ற அமைப்பு மருத நிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. எனவேதான் மருதநில மக்கள் "குடும்பர்" எனவும் அழைக்கப்படுகின்றனர். மொழியானது தன்னிகரற்று ஓங்கி வளர்ந்து
செம்மையடைந்தது. மருதநிலத்தின் பெருஞ்செல்வமானது  பகைவர்களையும் கள்வர்களையும் மருத நிலம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.
               பகைவர்களிடமிருந்தும் கள்வர்களிடமிருந்தும் மக்களைக் 
காக்கும்பொருட்டு அரசு என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இவ்வரசு எனும் அமைப்பானது பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குப் பின் பேரரசு எனும் நிலையை அடைந்தது. மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தவுடன் அக்குடும்பத் தலைவன் குடும்பன் எனப்பட்டான். பல்வேறு குடும்பங்கள் சேர்ந்து ஒரு சிறு கூட்டமாக வாழ்ந்த பகுதி ஊர் எனப்பட்டது. எனவேதான் மருத நிலக் குடியிருப்புகள் மட்டுமே ஊர் என அழைக்கப்பட்டன. அவ்வூரின் தலைவன் "ஊர்க் குடும்பன்" எனப்பட்டான்.இவ்வாறு பல ஊர்களையும் ஒருங்கிணைத்து நாடுகள் எனும் சிறுசிறு நிலப்பகுதியும் அந்நாடுகளின் தலைவர்கள் "நாட்டுக் குடும்பர்கள்"  எனவும் அழைக்கப்பட்டனர். இவ்வமைப்பே பாண்டியர்கள் வீழ்ச்சியடைந்த 15 - ஆம் நூற்றாண்டுவரை தமிழரின்(சேர சோழர் உட்பட )  உள்ளாட்சி அமைப்பாக இருந்தது. இப்படியான பல நாடுகளையும் ஒருங்கிணைத்து உருவானதே அரசு எனும் பெரும் நிறுவனம் ஆகும். அவ்வாறான பெரும் பாண்டிய அரசின் மன்னர்களில் பெருங்குடும்பனே முதுகுடுமி பெருவழுதியாவான். அரசு எனும் அமைப்பானது தனது எல்லையை நால்வகை நிலங்களுக்கும் விரிவுபடுத்தியே அமைக்கப்பட்டது.
               
                  ஈடு இணையற்ற மொழியின் வளர்ச்சியால் பல்வேறு தொழில்நுட்பங்களும் மருத நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றில் ஒன்றுதான் கடல் மேலாண்மை. மருதநில மக்கள் தங்களின் பெரும் பொருள் கொண்டு பெரும் கப்பல்களையும், நாவாய்களையும்( இதனாலேயே "குடும்பர்கள்" எனும் பெயரில் பெரும் வணிகக் கப்பல்களை கண்டதாக சீன மாலுமி கூறுகிறார். ) கட்டி ஆமைகளின் பின்னே கடல் நீரோட்டத்தைப் பயன்படுத்தி உலகமெங்கும் சென்று தமிழரின் முதல் பேரரசும் உலகின் முதல் வல்லரசுமான பாண்டியப் பேரரசை நிறுவி உலகாண்டனர். அதன் எச்சமே இன்றும் உலகின் பல்வேறு பகுதிகளான கிரேக்கம், சீனம், இலத்தீன், ஜப்பான், வியட்நாம், மெக்ஸிகோ, சிலி, பெரு, பிரேசில், தாய்லாந்து, நேபால், பர்மா போன்ற இன்னும் பல்வேறு பகுதிகளிலும் காணக்கிடக்கின்றன. இதனாலேயே உலகின் பல்வேறு மொழிகளின் வேர்ச்சொற்களும் தமிழில் உள்ளன.

                கிரேக்கத்தின் ஆதிக் கடவுள் ஏதனபள்ளா எனவும் கிரேக்கத்தை ஆண்ட அரசர்கள் பாண்டியன் 1 மற்றும் பாண்டியன் 2 எனவும் கிரேக்க வரலாறுகள் கூறுகின்றன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் முகமாய் பாண்டியன் 2 அரசனின் மகனின் பெயரே பள்ளன் என உள்ளது. இவர்கள் நம் மருதநிலப் பள்ளர்களே ஆவர்.பிரேசிலின் பெரும்பகுதி மக்கள் தங்களின் பெயருக்குப் பின்னால் பள்ளர் என்று போட்டுக்கொள்கின்றனர்.சிலியில் இருக்கும் ஒரு நகரின் பெயர் மள்ள. இன்றைய பாகிஸ்தானின் ஒரு பகுதி இசுலாமியர்கள் தங்களின் பெயருக்குப் பின்னால், பள்ளர்களின் பாண்டியர் படையின் போர் மறவர்களைக் குறிக்கும் "காலாடி" எனும் பெயரை தங்களின் 
அடையாளமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதேபோல உலகின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளர் எனும் பெயர்கொண்டு பல ஊர்கள் உள்ளன. வெளி நாடுகளிலேயே தமிழினத்திற்கான சான்றுகள் 
நூற்றுக்கணக்கில் காணக் கிடைக்கும்போது 
இந்தியாவிலோ நாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன.இந்தியாவில் தமிழர்களின் வரலாறு மீட்டெடுக்கப்படுமானால் 
இந்தியாவின் ஆதிக்க சக்திகள் தமிழரே. ஆனால் இந்தியாவில் உள்ள 
தமிழர்கள் அனைவரும்  தமிழருடைய 
அடையாளமாக இன்றும்  வைத்திருப்பது பள்ளர், மள்ளர், குடும்பர் எனும் பெயர்களையே. இவை அனைத்தையும் தமிழினத்திற்கான சான்றாக தமிழினத்திற்கான ஆளுமையாகப் பார்க்காமல் சாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பதனாலேயே தமிழனின் பெருமையும் புகழும் மதுரைவரைக்கூட தெரியாமல் புதைந்து கிடக்கிறது.

                  முல்லை நில மக்களோடு கொங்குப் பகுதி பள்ளர்கள் வைத்திருந்த கலப்பு உறவே பின்னாளில் கவுண்டர் எனும் சாதி உருவாகக் காரணம் ஆனது. உண்மையில் கவுண்டர் என்பது சாதியல்ல; ஒரு பட்டம். கவுண்டர் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய மக்கள் எல்லோரிடமும் தங்களுக்கிடையே கொள்வினை-கொடுப்பினை கிடையாது.ஒக்கலிகா போன்ற கவுண்டர் பிரிவுகள் தெலுங்கு  பேசும் மக்கள் ஆவர்
இன்றைய கவுண்டர்களில் மல்லக் கவுண்டர் என்று ஒரு  பிரிவும் உண்டு. கவுண்டர் பிரிவுகள் சில பழனி முருகனை
கும்பிடுவதோடு அவரோடுள்ள இடும்பன் எனப்படும் "குடும்பன்" சாமியை 
குல தெய்வமாகவும் கும்பிடுவது குறிப்பிடத்தக்கது. ஆக இவர்கள் மருத நில மக்கள் என்பதற்கு இதுவும் சான்று. இலங்கையில் அண்ணன்மார் சாமி பள்ளர்களின் குல தெய்வமாக இருக்கையில்  இங்கு மட்டும் கவுண்டர் எனும் சாதியும் சொந்தம்
கொண்டாடுவது கவுண்டர்களின் மருத நிலத்தொடர்பேயாகும்.  முல்லை நில மக்களோடு உறவு கொண்ட பள்ளர்களால் வேந்தர்களின் வீழ்ச்சிக்குப்பின் முல்லைநில மக்களைக் கட்டுப்படுத்த முடியாதுபோய் போரில் முடிந்தது; அதுவே அண்ணன்மார் வரலாறும் ஆனது.  

               சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பள்ளர்களில் ஒரு பகுதியினர் முல்லை நில மக்களின் கலப்பால் பள்ளி எனும் பெயரில்  வன்னியர் எனும் தனிச்சாதியினர் ஆனர். வன்னியர் என்பது பட்டமே; சாதியல்ல. இலங்கையில் வன்னியர் எனும் பெயர் கொண்டோர் அனைவரும் பள்ளர்களே. தமிழகத்திலும் 
அணைத்து பாண்டியராசா   கோவில்களிலும்  வன்னிராசாவும் 
 வன்னிமாச்சியும் பள்ளர்களாலேயே  வணங்கப்படுவது, வன்னியர் முல்லைநில மக்களின் கலப்பால் பிரிந்த பள்ளர்களின் ஒரு பகுதியினர் என்பதாலேயே ஆகும்.
வன்னியர்களில் ஒரு பிரிவு மக்கள் தெலுங்கு பேசுவதும் உண்டு. இவர்களுக்கும் ஏனைய வன்னியர்களுக்கும் கொள்வினை-கொடுப்பினை கிடையாது. 

                   இம்மண்ணையும் மக்களையும் காத்து நின்ற வேந்தர்களின் வீழ்ச்சி, 
ன்றாய் இருந்த தமிழினத்தை சாதியாய்ச் சூறையாடி  இன்று வரையிலும் 
பிரித்து வைத்திருக்கிறது. தமிழினத்திற்க்கிடையே பகையை எண்ணெய் இட்டு வளர்க்கிறது வந்தேறி வடுக திராவிடக் கூட்டம். இக்கூட்டமானது உண்மையில் என்றுமே சாதியை ஒழிக்காது. ஏனெனில் சாதிதான் இவர்களை இம்மண்ணில் ஆள வைத்துக்கொண்டிருக்கிறது. இவ்வறிவற்ற நிலையில் திராவிடக் கூட்டம் மேல்சாதி, கீழ்சாதி எனப் பிரித்து சாதி ஒழிப்பு(!!!) செய்கிறது. இக்கூட்டம் ஒருநாளும் இது எப்படி மேல் சாதி..? இது எப்படி கீழ்சாதி...? எனும் பகுத்தறிவுக் கேள்வியைக் கேட்டதில்லை.அப்படியானதொரு சிந்தனை விதைக்கப்பட்டிருப்பின் ஒரே இனமான தமிழினம் தன் சாதி பற்றிய வேரைத்தேடி ஒரு புள்ளியில் என்றோ இணைந்திருக்கும். அதை விடுத்து, இல்லவே இல்லாத மேல்சாதி கீழ்சாதி கலப்பு எனும் பெரும் பொய்க்கோட்பாடு கொண்டு தமிழர்க்குள்ளே பகையை மேலும் மேலும் வளர்க்கிறது.
                    இம்மண்ணையும் மக்களையும் காக்க வேண்டிய தலையாய கடமை கொண்டுள்ள வேந்தன் மரபினரின் புறநானூற்றுப்படை களம்காண புறப்பட்டுவிட்டது. வேந்தர்குல கிளைக்குடிகளையும் ஏனையபிற தமிழ்ச் சாதிகளையும் கரம்பற்றிக் களம் காணும் முகமாகவே யாம் சாதிபற்றிய பொய்மைகளை உடைத்து எமது உறவுகளை நோக்கி கரம் நீட்டி அழைக்கின்றோம். எமது கரம்பற்றி தமிழினம் காக்க வருவதும் இனத்தோடு சேர்வதும் உங்களின் முடிவுக்கே விடப்படுகிறது. யார் வரினும் வராவிட்டாலும் தலைக்குடிகளான, வேந்தர் மரபினரான பள்ளர்படை தமிழினம் மீட்க களம் கண்டே தீரும். இது உலகாண்ட பாண்டியர்களின் வேந்தன் மரபினரின் தணியாத தமிழர் தாயகத் தாகம்.
                                                                                        - செல்லப்பாண்டியன்                  
        ( நன்றி : கடலியியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் திரு.ஒரிஸ்ஸா பாலு அவர்கள். )                          

Thursday 27 September 2012

முருகன் யார் ?

                                       
                                          

              " இந்து சமயம் "  என இன்று நடைமுறையில் உள்ள சமயக் கட்டமைப்பானது வேந்தர்களின் வீழ்ச்சிக்கு பின்னே மாற்றியமைக்கப்பட்ட தமிழர் இறைவழிபாட்டு முறையாகும் . தமிழர்தம் இறை  வழிபாடு என்பது நன்றி நவிலும் கோட்பாடுகளையே அடிப்படையாகக்  கொண்டது . ஆதியில் மனிதனின் வாழ்வுக்கு பெரும் உதவியாக இருந்த இயற்கையை  தமிழர்கள் வணங்கினர். குடும்பம் , சொத்து , அரசு போன்ற கட்டமைப்புகளின் பரிணாம வளர்சிக்குப்பின்  தமிழர்களின் இறைவழிபாடு மேலும் சிறப்படைந்தது.           

                     கள்வர்களிடம்மிருந்து , பகைவர்களிடம்மிருந்தும்  மக்களை காக்கும் பொருட்டு அரசுகள் கட்டமைக்கபட்டன. மக்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்கும் பொருட்டு தன்னுயிர்  ஈந்த ஈகியர்கள் அம்மக்களால் நன்றியோடு நினைவுகூறப்பட்டனர் . பகைவர்களுடான போர்களில் தன்னுயிர் ஈந்து தம்மினம் காத்த மன்னர்களையும் , படைத்தலைவர்களையும் மக்களால் மறக்கவியலாது போனது. தம் வாழ்நாள்  முழுவதும் தம்மினம், பண்பாடு மற்றும் வாழ்வாதாரம் போன்றவைகளை செம்மைப்படுத்தியும் அவற்றைப் பாதுகாத்தும் இயற்கை மரணம் எய்திய பேரரசர்களின்  மறைவுக்குபின் அம்மக்களால் நன்றியோடு வணங்கப்பட்டனர்,

         தங்களை விட்டு பிரிந்தாலும் அம்மாவீரர்களின் நினைவுகளை மட்டும் மறக்க விரும்பாத மக்கள் அம்மாமனிதர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் நடுகற்களை ஊன்றியும் பின்னர் அவர்களை சிலையாக வடித்தும் வணங்கி வந்தனர். இந்நன்றி நவிலும் நிகழ்வுகளே இன்று வரையிலும் குலதெய்வம் வழிபாடாகவும் சமய வழிபாடாகவும் நடைபெற்று வருகிறது.

                தம் குலத்தில் பிறந்து தம் குலத்திற்காக அரும்பெரும் பாடுபட்டு போரிலோ அல்லது இயற்கையாகவோ மரணமடைந்த தம் முன்னோர்களை வணங்கும் முறையே குலதெய்வ வழிபாடாகும். இக்குலதெய்வ வழிபாடுகளின் மூலம், தங்கள் குலத்திற்காக தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளையும், தம் முன்னோர்கள் தங்களுக்காக ஆற்றிய அரும்பெரும் கடமைகளையும் ஈகைகளையும் வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தப்படுகிறது.தம்முன்னோர்கள் போலவே தாமும் தம் குலத்திற்காகவும், இனத்திற்காகவும் பாடுபட வேண்டும் என்பதை வருங்கால சந்ததியினருக்கு உணர்த்தும் பொருட்டே ஆண்டுகள் தோறும் குலதெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

                அரசுகள் விரிவடைந்த காலகட்டங்களில், குறிப்பாக மருத நில ஊர்க்குடும்புமுறை  அரசுகள் தங்களின் ஆளுகையை அனைத்து வகை நிலப்பரப்புகளுக்கும் விரிவுபடுத்தின. மருதநில மன்னனானவன் நால்வகை நிலங்களுக்கும் தலைவனாகி வேந்தன் என ஏற்றப்பட்டான். இவ்வேந்தர் மரபினரே பின்னர் உலகெங்கும் பரவி தமிழையும் தமிழர்களின் ஒரே பண்டைய கால அரசான பாண்டியப் பேரரசையும் உலகம் முழுவதும் கட்டமைத்தனர். அவ்வாறாக மருதநில வேந்தர்கள் உலகின் அனைத்து வகை நிலப்பரப்புகளையும் காத்து நின்றபடியால் அவர்கள் அனைத்து நில மக்களுக்கும் அரசர் எனக் கொள்ளப்பட்டார்கள்.

                 அனைத்து நில மக்களையும் காக்கும் பொருட்டு நல்லாட்சி செய்து மறைந்த அம்மருதநில வேந்தர்கள் அவர்களின் மறைவுக்குப் பின்னால் அனைத்து மக்களாலும் வணங்கப்பட்டனர். தம் கொடையின் கீழ் வாழும் தம் குடிமக்களை பகைவர்களிடமிருந்தும், கள்வர்களிடமிருந்தும் காக்கும் பொருட்டு வீரமரணமடைந்த வேந்தர்களும் படைத்தலைவர்களும் அனைத்து மக்களாலும் தங்களின் ஆண்டவனாக வணங்கப்பட்டனர்.

பாண்டியவேந்தன் முருகன் 

                                               

                 தமிழ்க்கடவுள் என உலகமெங்கும் வணங்கப்பெறும் முருகக் கடவுள் பாண்டியவேந்தனாவான். மீனாட்சி எனும் தாடாதகைப் பிராட்டிக்கும், சுந்தரபாண்டியனுக்கும் பிறந்த உக்கிரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்டவனே முருகன் ஆவான். மலையத்துவசப்பாண்டியனுக்கும், சூரசேன சோழனின் மகளான காஞ்சனமாலைக்கும் பிறந்தவளே தாடாதகைப் பிராட்டி என்னும் மீனாட்சி ஆவாள். குறிஞ்சி நிலத்தலைவன் என பிற்காலத்தே தொல்காப்பியம் போன்ற இலக்கிய நூல்கள் குறிப்பிடும்  முருகன் மருதநிலக் கிழவனேயாவான். ஏனெனில் நால்வகை நிலங்களும் மருதநில வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தன. 
                     பழங்காலத்தில் தமிழகத்தின் மேல் நடந்த பகைவர்களின் பெரும் படையெடுப்பை ஆறு இடங்களில் படைவீடு அமைத்து தமிழினம் காத்த பாண்டிய வேந்தனே முருகன் ஆவான். அறுபடை வீடு எனக் கொள்ளப்படும் முருகனின் இன்றைய திருத்தலங்கள் எல்லாம் தமிழகம் காக்க முருகனால் அமைக்கப்பட்ட படைவீடுகளே ஆகும்.

                "திருமுருகாற்றுபடை" யில் நக்கீரர் முருகனை வேந்தர் மரபினன் எனவும் மள்ளர் (பள்ளர்) எனவும் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
    "செருவில் ஒருவ பொருவிறல் மள்ள!"                         (செய்யுள் - 262) 
    "அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக !"            (செய்யுள் - 269) 

 இங்கு அரும்பெறல் மரபு என மள்ளர் மரபை நக்கீரர் குறிப்பிடுகிறார். 

                   மள்ளர் மரபினரைச் சேர சோழ பாண்டிய வேந்தர்களாக சங்க இலக்கியங்களில் முதல் பிற்கால சிற்றிள்ளக்கியங்கள் வரை புகழ்ந்து பாடபட்டிருப்பது குறிப்பிடத்க்கதாகும். இம்மள்ளர் மரபினரே பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர். இப்பள்ளரே தொல்காப்பியம் போற்றும் மருதநில ""வேந்தன் (இந்திரன்)"" வழிவந்த இந்திர குலத்தவர்(தேவேந்திர குலத்தவர்) எனவும் இன்றும் அழைக்கப்பட்டுவருகின்றனர். எனவே முருகன் மருத நிலத்து மள்ளர் குலத்தை சார்ந்தவன் எனும் போது அவன் மருத நிலக்  கிழவனாகவும், தமிழனாகவும் ஆகிறான் .
              முருகன்  தெய்வானையை திருமணம் செய்த இடமே  ""திருபரங்குன்றம்"" ஆகும். திருபரங்குன்றத்தில் ஆண்டுதோறும் முருகன்-தெய்வானை திருமணவிழா மரபுவழிச் சடங்காக இன்றும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சூரனை அழித்தபின் தேவேந்திரனின் மகளாகிய தெய்வானையை முருகன் மணம் முடிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. திருமணம் முடிந்தபின் மாமனார் வீட்டிற்கு மணமக்கள் "" மறுவீடு"" செல்லுதல்  என்பது தமிழர் மரபாகும். அம்மரபுப்படியே சிவனும் பார்வதியும், முருகன்-தெய்வானை திருமணம் முடிந்தபின் மணமக்களை முருகனின் மாமனாரான  தேவேந்திரனின் இல்லத்திற்கு மறுவீடு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறான இத்திருமண சடங்கு  மரபில் முருகனும் தெய்வானையும் மறு வீட்டிற்கு வருவது இன்றைய தேவேந்தர்களின்(பள்ளர்களின்) அறமடத்திற்கே ஆகும். மறுவீடு வரும் தம் குல மக்களை தேவேந்ததிரனின் வழிவந்தவர்களாகிய  பள்ளர்கள் தங்களின் அறமடத்தில் வரவேற்று  மரியாதை செய்கின்றனர். தொல்காப்பியம் போற்றும் மருதநில வேந்தனே தேவேந்திரன்(இந்திரன்) என்பதும் அவனே, மருதநிலத் தமிழர்களான பள்ளர்களின் வழிவந்தோன் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.  
                   பள்ளர் குலத்து மரபினனான தேவேந்திரனின் மகளான தெய்வானையை முருகன் மணம் புரிந்ததிலிருந்து முருகன் பள்ளர் குலத்தவன்  என்பதையும் அவன் தமிழர் மரபினன் என்பதையும் எவராலும் மறுக்க இயலாது. நக்கீரர் தம் முருகாற்றுப்படையில் முருகன் மள்ளன் எனக்கூறும் இலக்கியச்சான்றோடு மேலே கூறப்பட்ட  முருகன்-தெய்வானை திருமணச் சடங்கை நடைமுறைச் சான்றாக  இணைத்துப்பார்க்கையில் முருகன் தமிழனே என்பது ஐயந்திரிபுர விளங்குகிறது.

                      கி.பி  1528-ல் ஏழுதப்பட்ட பழனிச் செப்புப்பட்டையம் முருகனுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகச் சுட்டுகிறது . தங்களின் முன்னோன்னாகிய முருகனுக்கு அக்காலத்திலயே ""தேவேந்திரர்  அறமடம் "" அமைத்து கோவிலுக்கு வரும் அனைவருக்கும் பள்ளர்கள் அன்னமிட்ட செய்தியும், இச்செலவிற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவேந்திர  குலத்தார் மடத்திற்கு கொடைகள் வழங்கிய செய்தியும் சிறப்பாகக்  கூறப்பட்டுள்ளது.  தம் முன்னோனாகிய முருகனுக்கு கோவில் கட்டிய பள்ளர்கள், பழங்காலத்தில் இருந்து இன்று வரையும் பழனி முருகன் கோவிலில் முதல்மரியாதை பெற்று வருகின்றனர். இவ்வாறு முருகனுக்கும் தமிழருக்கும் உள்ள உறவை இச்செப்புப்பட்டயம்  மேலும் உறுதி செய்கிறது.
 
                திருச்செந்தூர் முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு பதினெட்டு அறமடங்கள் பழங்காலந்தொட்டு இருந்து வருகின்றன. திருச்செந்தூரில் உள்ள பிற அறமடங்களுக்கும்
பள்ளர்களின் அறமடங்களுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. பள்ளர்களின் அறமடங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை கொண்டதும் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மிகப் பழமையானதும் ஆகும்.
                     பாண்டியர்களாகிய பள்ளர்களின் வீழ்ச்சிக்குப்பின் தெலுங்கு வடுகர்களும் அவர்களின் அடியாட்களும்  கோவில்களை கொள்ளையிட்டதோடு அதைத்தொடர்ந்து கோவில்களைக் கைக்கொள்ளும் வகையில் அவர்களுக்கென மடங்களையும் உருவாக்கிக்கொண்டனர். இம்மடங்கள் அனைத்தும் 500 வருடங்களுக்கு உட்பட்டவையே ஆகும். இந்திய விடுதலைக்குப்பின் திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிர்வாகம் பள்ளர்களின் நிர்வாகத்திலிருந்து முற்றிலுமாக பறிக்கப்பட்டது.

             கழுகுமலை முருகன் கோவிலில் தேர்த்திருவிழா பள்ளர்களால் தேரோட்டப்பட்டு ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.பாண்டியர் வீழ்ச்சிக்குப்பின் கோவில் நிர்வாகம் தெலுங்கு வடுகர்களால் பள்ளர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. எனினும் இன்றும் கழுகுமலை முருகன் கோவிலில் பள்ளர்களுக்கு மரபு சார்ந்த முதல் மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

               முருகனுக்கும் தமிழுக்கும், முருகனுக்கும் பள்ளருக்கும் உள்ள உறவானது குருதி சார்ந்தது. முருகன் பள்ளர் வழிவந்த பாண்டியவேந்தன் என்பதாலேயே முருகனையும் தமிழையும் பிரிக்கவியலாது.எனவேதான் ஆரியம், திராவிடம், தலித்தியம் என எத்தனை எத்தனையோ பெருங்கேடுகள் மேலெழுகின்ற போதிலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து துள்ளியெழுகுது வேல்.!
                                              - செல்லப்பாண்டியன்
நன்றி : 
   ஐயா மூதறிஞர் தேவ.ஆசிர்வாதம் மற்றும் ஐயா குருசாமி சித்தர் படைப்புகள்.